அமிர்த கரைசல் செய்முறை
பசு மாட்டு சாணம் - 1 கிலோ
கோமியம் - 1 லிட்டர்
வெல்லம் - 250 கிராம்
ஒரு மண்பானை அல்லது பிளாஸ்டிக் வாளியில் மேலே சொன்ன அனைத்தையும் 10 லிட்டர் தண்ணீர் சேர்த்து கலந்து மூடி வைக்கவும் .
24 மணி நேரம் கழித்து அமிர்த கரைசல் தயார் .
1 லிட்டர் அமிர்த கரைசலோடு 10 லிட்டர் தண்ணீர் சேர்த்து செடிகளுக்கு இடலாம்.
ஜீவாமிர்தம் செய்முறை
பசு மாட்டு சாணம் - 1 கிலோ
கோமியம் - 1 லிட்டர்
வெல்லம் - 200 கிராம்
(துவரை,உளுந்து முளைவிட்ட பயிரை அரைத்து கொள்ளவும் )
தோட்ட மண் -1 கைப்பிடி
ஒரு மண்பானை அல்லது பிளாஸ்டிக் வாளியில் மேலே சொன்ன அனைத்தையும் 10 லிட்டர் தண்ணீர் சேர்த்து கலந்து மூடி வைக்கவும் .
48 மணி நேரம் கழித்து ஜீவாமிர்தம் தயார் .
1 லிட்டர் ஜீவாமிர்த கரைசலோடு 10 லிட்டர் தண்ணீர் சேர்த்து செடிகளுக்கு இடலாம்.
மீன் கழிவு - 1/2 கிலோ
(குடல், தலை உட்பட)
வெல்லம் - 1/2 கிலோ
ஒரு பிளாஸ்டிக் வாளியில் மேலே சொன்ன அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து மூடி வைக்கவும்.22நாட்கள் கழித்து மீன் அமினோ
அமிலம் தயார் .30 மில்லி மீன் அமினோ
அமிலம் உடன் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து செடிகளுக்கு இடலாம்.
அமிலம் தயார் .30 மில்லி மீன் அமினோ
அமிலம் உடன் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து செடிகளுக்கு இடலாம்.