Thursday, August 16, 2018

                
                 அமிர்த கரைசல் செய்முறை 


பசு மாட்டு சாணம்  - 1 கிலோ 
கோமியம்                     - 1 லிட்டர் 
வெல்லம்                        - 250 கிராம் 

ஒரு மண்பானை அல்லது பிளாஸ்டிக் வாளியில்  மேலே சொன்ன  அனைத்தையும் 10 லிட்டர்  தண்ணீர் சேர்த்து  கலந்து மூடி வைக்கவும் .
24 மணி நேரம் கழித்து அமிர்த கரைசல் தயார் .
1 லிட்டர் அமிர்த கரைசலோடு 10 லிட்டர் தண்ணீர் சேர்த்து செடிகளுக்கு இடலாம்.




                    ஜீவாமிர்தம் செய்முறை 


பசு மாட்டு சாணம்  - 1 கிலோ 
கோமியம்                     - 1 லிட்டர் 


வெல்லம்                        - 200 கிராம் 
முளைவிட்ட பயிர்     -250 கிராம் 
(துவரை,உளுந்து  முளைவிட்ட பயிரை அரைத்து கொள்ளவும் )
தோட்ட மண்               -1 கைப்பிடி 

ஒரு மண்பானை அல்லது பிளாஸ்டிக் வாளியில்  மேலே சொன்ன  அனைத்தையும் 10 லிட்டர்  தண்ணீர் சேர்த்து  கலந்து மூடி வைக்கவும் .
48 மணி நேரம் கழித்து ஜீவாமிர்தம் தயார் .


1 லிட்டர் ஜீவாமிர்த கரைசலோடு 10 லிட்டர் தண்ணீர் சேர்த்து செடிகளுக்கு இடலாம்.



                      மீன் அமினோஅமிலம் 


மீன் கழிவு       - 1/2 கிலோ 
(குடல், தலை உட்பட)
வெல்லம்         - 1/2 கிலோ 

ஒரு பிளாஸ்டிக் வாளியில்  மேலே சொன்ன  அனைத்தையும் சேர்த்து  நன்கு  கலந்து மூடி வைக்கவும்.22நாட்கள்  கழித்து மீன் அமினோ 
அமிலம்  தயார் .30 மில்லி  மீன் அமினோ 
அமிலம் உடன்  1 லிட்டர் தண்ணீர் சேர்த்து செடிகளுக்கு இடலாம்.